புத்தக விமர்சனம்: சு.வெங்கடேசனின் வேள்பாரி 2

வீரயுக நாயகன் வேள்பாரி by Su.Venkatesan (Author) by சு.வெங்கடேசன் (Author)

My rating: 5 of 5 stars


இது போன்றதொரு அதிசிறந்த படைப்பை என் வாழ்நாளில் நான் வாசித்ததில்லை. ஒவ்வொரு பக்கமும் மயிர்க் கூச்செரியும் வண்ணம் சு.வெ அவர்களால் வடிக்கப் பட்டுள்ளது.

முதல் பாகத்தில் நிறைய “குல” விளக்கங்கள் இருந்தன. ஆனால், இதில், முதல் பக்கம் பற்றி எரிய ஆரம்பிக்கும் கதை இறுதி வரை தொடர்ந்தது.

போர்க் காட்சிகள் மட்டுமே முக்கால் பாகம் கொண்ட ஒரு புத்தகம் இதுவே. அதையும் மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார் ஆசிரியர். அவரது புனைவுக்கும் தமிழ் ஆளுமைக்கும் இனி நான் அடிமை. எவ்வளவு நுட்பமான கதை, நம்பகமான பாத்திரங்கள்!

பாரி, கபிலர், தேக்கன், முடியன், உதிரன், நீலன், பொற்சுவை, காலம்பன், கொற்றன், கீதானி, இராவதன் – இவர்களை எல்லாம் விட்டு மனம் எதார்த்த வாழ்விற்கு வருவதே பெரும் பாடு!

வேள்பாரி வாசிக்க அனைவருக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

This is the first time in my life I am struggling with the deficiency of stars. This book deserves 10/5 stars if I have to be honest and the writer deserves all the literary awards this world has.

A brilliant thriller. An epic saga! Velpari and the people in this book are going to haunt anybody who reads for years to come!



View all my reviews

புத்தக விமர்சனம்: சு.வெங்கடேசனின் வேள்பாரி 1

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி by Su. Venkatesan

My rating: 5 of 5 stars


This is the first time ever, I feel the stars are not enough. I want to give this book 10 stars out of 5. It is that good!

என்ன சொல்ல? எங்கிருந்து தொடங்க?

சு.வெங்கடேசன் கண்முன் இருந்தால் அவரது கைகளுக்குள் என் முகத்தைப் புதைத்து நன்றி கோருவேன்.

வேள்பாரி – தொகுதி 1, அதி சிறப்பான ஒரு புனைவு. இது சாத்தியமா என்று வியக்க வைக்கும் அளவிற்கு அக்கால மக்களின் வாழ்க்கை நிலை, முக்கியமாக அறம், இவற்றை எல்லாம் எப்படி சுத்த தமிழில் தந்துள்ளார் என்று வியந்து வியந்து வாசித்தேன்.

இது ஒரு காலத்தால் அழிக்க முடியாத தமிழ்ப் பொக்கிஷம்.

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கண்முன் எழுந்து உயிர்ப்போடு சுற்றி வருவது அந்த காலத்துக்கே நன் சென்று விட்டேன் என்று சான்று கூறியது.

கபிலரின் வருகை – அடடே! சிலிர்த்தது. பாரியின் நுழைவோ நாம் படங்களில் கண்டு ரசித்த காட்சிகள் எல்லாம் தோற்றுவிடும். நீலன், மயிலா, அங்கவை, தேக்கன், பழையன், காலம்பன் என இவர்கள் உடன் பயணம் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கொற்றவைக் கூத்து, பாண்டிய சூழ்ச்சி என கதையின் போக்கு வாரிக் கொண்டு போனது.

இரண்டாம் பாகம் தொடங்க அதிக ஆவலோடு உள்ளேன்.

Such a brilliant narrative in fluent Tamil – loved every bit of the first part!



View all my reviews

புத்தக விமர்சனம்: ஜெயமோகனின் அறம்

அறம் [Aram] by Jeyamohan

My rating: 4 of 5 stars


இதுவே நான் வாசிக்கும் ஜெயமோகனின் முதல் நூல்.

தலைப்பில் “அறம்” என்னை ஈர்த்தது. வாங்கிவிட்டேன்.

முதல் கதையின் முடிவிலேயே என்னை நல்லாப் பாதித்துவிட்டது. “அறம் ” – ரொம்ப எதார்த்தமான அக்கால கிராமியக் கதை.

சாதி, மத வேறுபாடுகள்; விடுதலை இந்தியாவின் சமூகம் என நிறைய விஷயங்கள்.
முக்கியம் – அந்தக் கதாப்பாத்திரங்கள்!! அடடே!! எவ்வளவு அற்புதமான மனிதர்கள்!

எனக்குப் பொதுவாக கலப்பு தமிழில் வரும் நூற்கள் பிடிக்காது. ஆனாலும், இந்நூலின் பாத்திரங்களுக்காகவே விதிவிலக்கு ஏற்படுத்திக் கொண்டேன்.

1. அறம்,
2. வணங்கான்,
3. யானை dr,
4. நூறு நாற்காலிகள்,
5. சோற்றுக்கணக்கு,
6. பெருவலி

இவை எல்லாம் நிச்சயம் மனதை உலுக்கிவிடும்.

இடையில் சில கதைகள் சுமார் தான். பெரிய கதைப் பொருள் ஏதும் இல்லை, ஆதலால் நான்கு புள்ளிகள்.

—–

A definite read actually. Brilliant writing in colloquial language and giving hindsight into the early 20th century. A good read with some of the most brilliant real life human characters inside!



View all my reviews

புத்தக விமர்சனம்: எஸ்.ரா-வின் இலக்கற்ற பயணி

இலக்கற்ற பயணி [Ilakkatra Payani] by S. Ramakrishnan

My rating: 4 of 5 stars


முதலில் இந்தப் புத்தகத்தின் தலைப்பு என்னை ஈர்த்தது.
“இலக்கற்ற பயணி” – நன்றாக இருக்கிறதே!

கட்டுரைத் தொகுப்பு நூலில் என்ன அனுபவம் கிடைத்துவிடும் என்றெண்ணி தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆசிரியரின் பயண அனுபவன்குளுக்கு மேல், அவர் அந்த இடங்களின் சிறப்புகள் பற்றியும் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் கூறியது புத்துணர்ச்சி அளித்தது.

இயற்கை இடங்கள் பற்றிய அவருடைய எழுத்துக்கள் என்னுள் சில ஆண்டுகளாய் உறங்கிப் போய் இருந்த இயற்கைக் கவிஞனை எழுப்பிவிட்டது.

ஒரு தமிழ் எழுத்தாளர், எப்படி இத்தனை ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டார் என்பது பெரும் கேள்வியாகவே இருந்தது. நான் இன்னும் ஒரு நாட்டிற்குக் கூடப் போனதில்லை. ஆனால், நிறைய வரலாறு, கதைகள் எல்லாம் படித்து ஆர்வம் கொண்டிருக்கிறேன். செல்ல வாய்ப்பும் பணமும் நேரமும் அமைய வேண்டும்.

———————-

A surprisingly good read. More than that, this book is giving such unknown vibes and a fresh feel inside – like rekindling the poet inside me for travel and history and nature. The author is really good with words and Tamil eloquence is laudable.



View all my reviews

புத்தக விமர்சனம்: சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை

Oru Puliyamarathin Kathai by Sundara Ramaswamy

My rating: 3 of 5 stars


இந்தப் புத்தகத்தின் தலைப்பு தான் என்னை வாசிக்க தூண்டியது.

எங்கள் வீட்டு முன்பும் ஒரு பிரம்மாண்ட புளியமரம் இருந்தது. எவ்வளவு பெரிது! எவ்வளவு பழமை! எவ்வளவு கம்பீரம்! அத்தனையும் சாலை அகலப்படுத்த வேண்டி கொடூரமாக வெட்டி வீழ்த்தினார்கள். நான் அப்பொழுது சிறுவன். மரம் கண்முன் அழிகிறதே என்று அழுதேன்.

இந்தப் புத்தகம் வாசிக்கையில் அந்தக் காலத்து கிராம வாழ்கை ஞாபகம் வரும்.

கதையின் போக்கு இக்காலத்து வாசகர்களுக்கு எந்தளவு ஓட்டும் என்று தெரியாது. பாதி புத்தகம் மேல் தாண்ட நானும் சிரமப்பட்டேன். அலுக்க ஆரம்பித்துவிட்டது.

1955ல் வந்ததால் எழுத்து நடையை பாராட்டலாம். மற்றபடி சுமார் தான். [பெரிய அளவு உணர்ச்சிப் பெருக்கும் ஏற்படவில்லை.



View all my reviews

கதை விமர்சனம்: கடல் புறா பாகம் 1 (சாண்டில்யன்)

கடல் புறா 1 [Kadal Pura] (கடல் புறா, #1)கடல் புறா 1 [Kadal Pura] by சாண்டில்யன்

My rating: 4 of 5 stars

பொன்னியின் செல்வனுக்கு அடுத்து நான் எடுத்த தமிழ் சரித்திரப் புதினம் கடல் புறா. சாண்டில்யனின் தமிழ் மிகவும் நேர்த்தியாக இதயங்களை கவரும் வகையில் இருந்தது. கதையின் கதாப்பாத்திரங்கள், கருணாகர பல்லவன், அநபாய குலோத்துங்கன், காஞ்சனா தேவி – இவர்களின் படைப்பும் உயிரோட்டமுள்ள பாத்திரப் புனைவும் அற்புதம். கதைக்களத்தை மிகப் பொறுமையாக எடுத்துக்கொண்டு போன ஆசிரியர், தக்க சமயங்களில் சரியான பரபரப்பையும் கொடுக்க மறக்கவில்லை. வீரம், காதல், நட்பு, போர், பகை, சூழ்ச்சி, தந்திரம் என அனைத்து உணர்வும் கதைக்குள் படரவே ஒரு நிறைவான வரலாற்றுக் கதை வாசிக்கும் அனுபவம் பிசறாமல் கிடைத்தது. கடைசி இரு நூறு பக்கங்களின் வேகமும் விறுவிறுப்பும் கதையை ஆசிரியர் கொண்டு சென்ற விதமும் மனத்துள் பரபரப்பிற்குச் சற்றும் பஞ்சமில்லாமல் செய்துவிட்டன. அடுத்த பாகத்தை நிச்சயம் உடனே ஆரம்பித்தாக வேண்டும் என்ற நிலைக்கு ஆசிரியர் தள்ளி விட்டுவிட்டார் என்றே கூற வேண்டும்.

View all my reviews